தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் சாடினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஆளும் நடப்பு அரசாங்கம் போதிய ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கூறியிருந்ததை மேற்கோள் காட்டி வெளியிட்ட அறிக்கையில் டோமினிக் லாவ் இதனைக் குறிப்பிட்டார். “முகைதீனின் கருத்து அவரின் பொறுப்பற்ற போக்கையேக் காட்டுகிறது. முந்தைய அரசாங்கத்தில் அவர் துணைப்பிரதராக பதவி வகித்தார். அப்போது அவர் வாய் திறக்காதது ஏன்? துணைப் பிரதமராக இருந்தபோது அவர் தூங்கிக் கொண்டிருந்தாரா? என்று வினவினார்…