ஜசெக அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்! -டாக்டர் டோமினிக் லாவ்

தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய பக்காத்தான் ஹராப்பான்  கூட்டணியை கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் சாடினார்.  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஆளும் நடப்பு அரசாங்கம் போதிய ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கூறியிருந்ததை மேற்கோள் காட்டி வெளியிட்ட அறிக்கையில்  டோமினிக் லாவ் இதனைக் குறிப்பிட்டார்.

    “முகைதீனின் கருத்து அவரின் பொறுப்பற்ற போக்கையேக் காட்டுகிறது. முந்தைய அரசாங்கத்தில் அவர் துணைப்பிரதராக பதவி வகித்தார். அப்போது அவர் வாய் திறக்காதது ஏன்? துணைப் பிரதமராக இருந்தபோது அவர் தூங்கிக் கொண்டிருந்தாரா? என்று வினவினார் டோமினிக் லாவ்.

    நாட்டின் நிதி நிலையைக் கருத்தில் கொள்ளாமல் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இவை என்பது நிரூபனமாகியுள்ளது. ஆகையால் இதற்கு ஜ. செ. க. கட்சியே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

       “ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் ஜ.செ.க மெட்ரிகுலேஷன் திட்டத்தில் கோட்டா முறையை நிலைநிறுத்துதல், பூமிபுத்ரா மேம்பாடு போன்ற இனவாத அடிப்படையிலான கொள்கைகளையே  ஜ.செ.க ஆதரித்து வருகிறது. குறிப்பாக,  மெட்ரிகுலேஷன் திட்டத்தில் கோட்டா முறை நிலைநிறுத்தப்படும் என்று லிம் குவான் எங் கூறியிருப்பதை சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது”.

” அரசாங்கம் உலக தர பல்கலைக்கழகத்தை அமைப்பதில் உண்மையில் அக்கறை கொள்ளுமேயானால்  இதனை புதிய பொருளாதார கொள்கை, தகுதி மற்றும் சிறந்த தேர்ச்சி நிலை  ஆகியவற்றின் அடிப்படையில் இதனை மேற்கொள்ள வேண்டும் என்று லிம் கிட் சியாங் 2007 ஆம் ஆண்டு ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்”.

   மெட்ரிகுலேஷன்  முடிவு பற்றிய விவரங்கள் தமக்குத் தெரியாது என்று துணை கல்வி அமைச்சர் தியோ நீ சிங் கூறியிருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார். பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் ஜ. செ. க. வெறும் பார்வையாளரே என்பதையே இது காட்டுகிறது என்றார் டோமினிக் லாவ்.

“தங்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் என்று பொதுத் தேர்தலுக்கு முன்னர் சீன வாக்காளர்களிடம் பொய்யுரைத்ததற்குப் பொறுப்பேற்று ஜ. செ. க. அமைச்சர்கள் குறிப்பாக லிம் குவான் எங் மற்றும் தியோ நீ சிங் ஆகிய இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும். இச்சமூகத்தின் உரிமைகள் நடப்பு அரசாங்கத்தின் கீழ் இன்னும் மோசமாகிக் கொண்டு வருகின்றன” என்றார் அவர்.

Source: http://www.anegun.com/?p=31954

Post navig 

Search

Calendar

Top

Google+
Follow @partigerakan